வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (13:18 IST)

ரூ.2000 நோட்டு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம் என கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத ஸ்டேட் வங்கியில் 2000 ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள எந்த விதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ஆவணமின்றி ரூ.2,000 நோட்டை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவரச வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது! இது முக்கியமான விவகாரம் என்பதால் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட வேண்டும் என நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளார். 
 
ஏற்கனவே ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற SBI வங்கி அறிவிப்பில் எவ்வித பிழையும், தன்னிச்சையும் இல்லை என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran