திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (07:27 IST)

இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.84 குறைவு.. இருப்பினும் இல்லத்தரசிகள் அதிருப்தி..!

gas cylinder
இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 84 குறையும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டிருப்பதால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 84 குறைந்துள்ளதை அடுத்து ரூபாய் 1937 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று என்னை நிறுவனங்கள் கூறியுள்ளது. இதனை அடுத்து வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 1118. 50 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது போல் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Edited by Siva