பின்வாசல் வழியாக தப்பி ஓடிய பொறுக்கி புகழ் சு.சுவாமி!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (11:18 IST)
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் மாளிகையின் பின்வாசல் வழியாக தப்பிச் சென்றார் என தெரியவந்துள்ளது. 

 
 
தமிழக அரசியலில் ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்த முடிவை எடுக்க முடியாமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருந்து வருகிறார்.
 
இந்நிலையில், பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி ஆளுநரை நேற்று 6.30 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவை ஆதரிக்கும்  சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்தது முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. 
 
ஆனால், ஆளுநருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு சுப்பிரமணியன் சுவாமி பத்திக்கையாளர்களின் சந்திப்பை தவிர்க்க பின்வாசல் வழியாக தப்பிச் சென்றுவிட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :