1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (10:53 IST)

நாட்டிற்கு ஆதரவாகவே 2ஜி தீர்ப்பு வரும்: சுப்பிரமணியன் சுவாமி

திமுகவின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு தேதி டிசம்பர் 21 என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு குறித்து சற்றுமுன்னர் இந்த வழக்கை தொடுத்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்
 
2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டிற்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்' என்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தபோது, தீர்ப்பு தினத்தில் புதியதாக வருபவர்களுக்காக திகார் சிறை எவ்வாறு தூசு தட்டி வைக்கப்படுகிறது என்பதை சரிபார்த்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு தேதி கடந்த அக்டோபர் மாதமே அறிவிக்கப்படவிருந்தது, பின்னர் அது நவம்பர் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு தற்போது டிசம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது