1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (10:37 IST)

2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக வாக்கு வங்கிக்கு ஆபத்தா?

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் தேதியும், 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் ஒரே நாளில் வருவதால், ஆ.ராசா, கனிமொழிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சசிகலா முதல்வர் பதவியை ஏற்க விடாமல் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது போல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவை மாற்றும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
ஆனால் அதே நேரத்தில் ஆ.ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்டால் திமுகவின் வாக்குவங்கி உயரவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.