1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (13:02 IST)

தற்கொலையா? கொலையா? சீன ராணுவ அதிகாரி மரணத்தின் பின்னணியில் பரபரப்பு!!

சீனாவில் உயர் ராணுவ அதிகாரின் மரணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவம் மிக உயர்ந்த அதிகாரம் மிகுந்த அமைப்பு. இதுல் மத்திய ராணுவ கமிஷனுக்கு அதிக அதிகார பொருப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
 
இந்த மத்திய ராணுவ கமிஷன் தலைவர், சீன அதிபர் ஜின்பிங். இந்த அமைப்பில் உறுப்பினர் என்ற உயர்ந்த அந்தஸ்தை வகித்து வந்தவர் ஜாங் யாங். ஜாங் யாங் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக மத்திய ராணுவ கமிஷன் தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இந்த மரணத்தால் பரபரப்பு ஏற்படுள்ளது. 
 
இதற்கு முன்னர், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்ட குவா பாக்ஸியோங், ஸு சாய்ஹவ் ஆகியோருடன் ஜாங் யாங் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
 
குவாவுக்கு கடந்த ஆண்டு ஊழல் வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஸு சாய்ஹவ் புற்றுநோயால் மரணம் அடைந்தார் என கூறப்படுகிறது. முக்கிய குற்றவாளிகள் மரணமடைந்த காரணத்தால், இவர்களுடன் தொடர்ப்பில் இருந்த ஜாங் யாங்யிடம் ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடந்தது. 
 
இந்நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது சீன ராணுவத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விசாரணை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது ஊழல் பற்றிய உண்மைகள் வெளியாகக்கூடாது என கொலை செய்யப்பட்டாரான் என இவரது மரணத்தின் பின்னணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.