அம்மாவுக்கு ‘ஐ லவ் யூ மம்மி’.. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மகள்..!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வந்த 21 வயது யுடியூபர் மற்றும் பி.எஸ்சி மாணவி போனு கோமளி, திங்கட்கிழமை அன்று தனது வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, குவைத்தில் இருக்கும் தனது தாய்க்கு "ஐ லவ் யூ மம்மி" என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். நீண்ட நேரமாக அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த தோழி நேரில் சென்று பார்த்தபோது கோமளி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், மென்பொருள் பொறியாளர் ஒருவருடனான மூன்று ஆண்டு கால காதல் முறிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த முடிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இவர் ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது. போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
Edited by Siva
