திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (14:47 IST)

இந்தியா சிரியாவாக மாறிவிடும்; இஸ்லாமியர்களை எச்சரிக்கும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

இஸ்லாமியர்களுக்கு ராமர் கோயில் அமைக்கும் இடத்தில் உரிமை இல்லை. அவர்கள் அங்கிருந்து விலகவில்லை என்றால் இந்தியா இன்னொரு சிரியாவாக மாறிவிடும் என்று இந்து மத துறவி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

 
அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்றுவரை தீர்வு காணப்படாத வழக்காக உள்ளது. அயோத்தியில் ராம்ர் கோயில் அமைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளனர். அண்மையில் அயோத்தி ரயில் நிலையத்தை ராமர் கோயில் வடிவில் மாற்றிமைக்க முடிவு செய்தனர்.
 
இந்நிலையில் தற்போது இந்து மத துறவி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ராமர் கோயில் தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் தங்களுக்கு உரிமை இல்லை என்பதை உணர்த்துக்கொண்டு அவர்களாகவே அங்கிருந்து விலக வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை எனில் இந்தியா இன்னொரு சிரியாவாக மாறிவிடும். 
 
நல்லெண்ணத்தில் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அந்த இடத்துக்கு உரிமை கோருவதை விட வேண்டும். அயோத்திக்கும் இஸ்லாமியர்களுக்கும் சம்மந்தம் இல்லை. ராமர் பிறந்த இடம் அயோத்தி என்பதால் அங்குதான் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.