ஐநா போர் ஒப்பந்தத்தை மீறி சிரிய அரசு படை தாக்குதல்- 34 பேர் பலி
சிரியா அரசு படைகள் ஐநாவுடன் போட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் 34 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்தனர். சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வந்தது. இந்த போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுடா நகரை மீட்பதற்காக சிரிய அரசு, ராணுவ தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது.
இந்த தாக்குதல் காரணமாக 900 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனால் ஐநா அமைப்பு சிரிய அரசு படைகளுக்கும், கிளிர்ச்சியாளர்களுக்கும் நடுவே 5 மணி நேரம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் சிரிய அரசு போர் ஒப்பந்தத்தை மீறி நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் 11 குழந்தைகள் இறந்தது குறிப்பிடதக்கது.