திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 மார்ச் 2018 (09:42 IST)

சிரிய அரசை எதிர்த்து தமிழகத்தில் எழும் ஆதரவு குரல்கள்...

சிரியாவில் அரசுக்கு கிளர்ச்சியாளர்களுக்கும் போர் ஏற்பட்டத்தில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். அதில் குழந்தைகள் பலரும் பலியாகினர். அதோடு மருத்துவ உதவிகள் ஏதுமின்றி தவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், சிரியா அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சிரியா அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தை முற்றுகையிட்டனர். 
 
மேலும், காரைக்கால், ஈரோடு, கோவை, காத்தான்குடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எஸ்டிபிஐ, முஸ்லீம்கம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம், மனித சங்கலி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
இதை தவிர்த்து சமூக வலைதளங்களிளும் அதிக அளவில் சிரிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் பதிவிடப்பட்டு வருகிறது. சிரியாவை பற்றி அதிக அளவில் தேடப்பட்டது தமிழகத்தில்தான் எனபது குறிப்பிடத்தக்கது.