வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (13:01 IST)

சபாநாயகர் தேர்தல்.. ஓம் பிர்லாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய இந்தியா கூட்டணி..!

சபாநாயகர் தேர்தல்  சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக நடைபெறவிருப்பதாகவும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி என இரண்டு கூட்டணிகளும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லாவை வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறுத்திய நிலையில் இந்தியா கூட்டணி சார்பில், கொடிக்குனில் சுரேஷ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். ஓம் பிர்லா சபாநாயகர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்த சில நிமிடங்களில் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 
இந்தியாவில் மக்களவைத் தலைவர் பதவிக்கு இதுவரை  தேர்தல் நடந்ததில்லை என்ற  நிலையில், முதல்முறையாக போட்டி வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் உறுதியாகியுள்ளது.
 
தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்பதாகவும், ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறிய நிலையில் திடீரென இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran