வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (20:07 IST)

உத்தர பிரதேச மக்கள் உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள்! - ராகுல்காந்தி மகிழ்ச்சி பேட்டி!

ragul gandhi
இண்டியா கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்துக் கொள்வது குறித்து நாளை கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவு செய்வோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாங்கள் இந்த தேர்தலில் பாஜக என்ற கட்சியை மட்டும் எதிர்த்து போராடவில்லை என்றும் அமலாக்கத் துறை, சிபிஐ, நீதித்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் போராட வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார்.  
 
அரசியல் சாசனத்தை காக்க தேர்தலில் காங்கிரஸ் போராடியதாக தெரிவித்த ராகுல்,  மோடி தலைமையிலான அரசை மக்கள் புறக்கணித்து உள்ளனர் என்றும் தேர்தல் முடிவுகள் அதை உறுதி செய்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
 
உத்தரப் பிரதேச மக்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை புரிந்து கொண்டு, அதனை பாதுகாக்கும் வகையில் இண்டியா கூட்டணியை ஆதரித்துள்ளனர் என்றும் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். இண்டியா கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்துக் கொள்வது குறித்து நாளை கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவு செய்வோம் என்று அவர் தெரிவித்தார். 


வயநாடு மற்றும் ராய்பரேலி என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாகவும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதில் எந்த தொகுதியை  தக்கவைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.