1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. sms explanation about rumour

வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கமா? எஸ்.பி.ஐ. விளக்கம்!

state bank
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகள் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களில் சிலருக்கு தங்களுடைய கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் ஒரு லிங்க் ஐ அனுப்பி அந்த லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கு மீண்டும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து எஸ்பிஐ நிர்வாகம் கூறியபோது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் அல்லது செல்போன் அழைப்பு வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்றும் ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது 
 
மோசடியை தடுக்க இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
காஸ்ட்லில் கிப்டா கொடுக்கனும்... விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளி பரிசு!