அதிமுக வெற்றிக்கு திமுக தலைவரே காரணம்: பாஜக பிரமுகர்

Last Modified வெள்ளி, 25 அக்டோபர் 2019 (21:18 IST)
சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இந்த இரண்டு தொகுதிகளும் திமுக மற்றும் காங்கிரஸ் கைவசம் இருந்த நிலையில் திமுக தலைவர் உள்பட திமுக கூட்டணி தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்தும் இந்த தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது

இது குறித்து இன்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக பிரமுகர் வினோத் அவர்கள் பேசியபோது ’அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரகள் முக்கிய காரணம் என்று கூறினார்

திமுக தலைவர் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசும்போது முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்ததை பொது மக்கள் விரும்பவில்லை என்றும், முதல்வரை தகாத வார்த்தைகளில் அவர் பேசியதும், ராஜினாமா செய்துவிட்டு நேருக்கு நேர் போட்டியிட தயாரா என சவால் விட்டதும் திமுக தலைவரின் நாகரீகமற்ற பேச்சு என்றும் இந்த பேச்சு தான் அதிமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் கூறினார்

அதிமுகவின் செல்வாக்கு, கூட்டணிக் கட்சியினரின் உழைப்பு மற்றும் பலம் என அதிமுக வெற்றிக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் திமுகவே இந்த வெற்றிக்கு காரணம் என பாஜக பிரமுகர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :