1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (19:51 IST)

நாங்க 162 பேர் இருக்கோம்; எங்களுக்குதான் ஆட்சி! – எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு

மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமையும் என்பது குறித்து நாளை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பை நடத்தியுள்ளது சிவசேனா கூட்டணி.

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்க திட்டமிட்டு வந்த நிலையில் திடீரென பாஜக ஆட்சியமைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு பாஜகவில் சேர்ந்து கொண்டு துணை முதல்வர் பதவியை பெற்றார்.

இது சட்டத்திற்கு முரணானது, ஆளுனர் ஒற்றை சார்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என சிவசேனா நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் அதன் தீர்ப்பு நாளை வெளியாக இருக்கிறது.

நாளை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் தங்களது பெரும்பான்மையை மக்களுக்கு காட்டும் வகையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து தங்கள் எம்.எல்.ஏக்கள் 162 பேரை கொண்டு ஒரு அணிவகுப்பை நடத்தியுள்ளது. மும்பை தனியார் ஹோட்டலில் இந்த அணிவகுப்பு நடந்தது. அதில் “நாங்கள் 162 பேர்” என்கிற பலகையும் இடம் பெற்றிருந்தது.