வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (19:28 IST)

ட்ராஃபிக் போலீஸுக்கு நடுரோட்டில் நிகழ்ந்த விபரீதம்! – பதறவைக்கும் வீடியோ!

ஹரியானாவில் போக்குவரத்து காவலரை பேருந்து ஒன்று மோதி தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா தலைநகர் சண்டிகரில் உள்ள போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றில் காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று காவலரை மோதியது.

பேருந்து மோதிய வேகத்தில் பறந்து சென்று விழுந்த காவலர் மயக்கமடைந்தார். உடனே சுற்றியிருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வேகமாக வந்த பேருந்தை பறிமுதல் செய்து அதை ஓட்டிவந்த ஓட்டுனர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியிலிருந்த காவலரை பேருந்து மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பரபரப்பான சாலையில் காவலர்களுக்கு ஒரு உயர் கோபுரம் அமைத்து தராமல், உயிருக்கு ஆபத்து தரும் வகையில் நடுரோட்டில் நிற்க வைத்ததற்கு சிலர் கண்டனங்களும் தெரிவித்துள்ளனர்.