செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (17:45 IST)

பத்திரிகையாளர்கள் முன் சிவசேனா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு: என்ன செய்ய போகிறார் அமித்ஷா?

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு மாதமாக எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் அரசியல் குழப்ப நிலை இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றது 
 
பட்நாவிஸ் தலைமையிலான ஆட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஒரு பிரிவினர் ஆதரவு அளிப்பதாக அறிவித்ததை அடுத்து அங்கு பாஜக ஆட்சி பதவி ஏற்றுக் கொண்டது. இருப்பினும் மெஜாரிட்டியை நிரூபிக்கும் வரை இந்த ஆட்சி உறுதி செய்யப் படாது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சரத்பவார் மற்றும் சிவசேனா எடுத்த அதிரடி நடவடிக்கையில் பிரிந்து சென்ற அஜித் பவாரின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து இன்று இரவு 7 மணிக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மொத்தம் 162 பேர்களை பத்திரிக்கையாளர் முன்னிலையில் அணிவகுப்பு செய்ய இருப்பதாக சிவசேனா தலைவர் அறிவித்துள்ளார் 
 
இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு ஆளுநர் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையாக இருந்தாலும் எளிதாக சமாளிக்கும் அமித்ஷா, இந்தப் பிரச்சினையையும் சமாளிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்