தொடர்புடைய செய்திகள்
- எம்.எல்.ஏ பதவியேற்ற மறுநாளே ராஜினாமா.. என்ன ஆச்சு சிக்கிம் முதல்வர் மனைவிக்கு?
- எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அகிலேஷ் யாதவ்..! உ.பி. அரசியலில் பரபரப்பு..!!
- வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி போட்டியா?
- நம்பகத்தன்மையை இழந்த மோடி.! பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா வலியுறுத்தல்..!!
- ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா.. ஆந்திர முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு..!
மனைவியை அடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த சிக்கிம் முதல்வர்.. என்ன காரணம்?
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது என்பதும் முதல்வராக பிரேம்சிங் தமாங் என்பவர் பதவி ஏற்றார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் சிக்கிம் மாநில முதல்வரின் மனைவி கிருஷ்ணகுமார் ராய் பதவியேற்ற மறுநாளே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் எதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் மனைவியை அடுத்து சிக்கிம் முதல்வரும் தனது ஒரு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங் என்பவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் அவர் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதனை அடுத்து சிக்கிம் முதல்வராக மீண்டும் பதவி ஏற்று கொண்ட பிரேம்சிங் தமாங் தான் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான ரோனக் என்ற தொகுதியை தக்க வைத்துக்கொண்டு இன்னொரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். அவரது ராஜினாமாவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் ராஜினாமா செய்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran
