புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (15:42 IST)

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா.. ஆந்திர முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு..!

jegan
ஆந்திர மாநிலத்தில்  பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திர சட்டசபை தேர்தலில் முடிவின்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக எட்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும். இன்னும் ஒரு சில நாட்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்றும் அப்போது அகில இந்திய அளவில் உள்ள முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran