1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (16:50 IST)

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அகிலேஷ் யாதவ்..! உ.பி. அரசியலில் பரபரப்பு..!!

Akilash Yadav
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கன்னோஜ் தொகுதி எம்.பியாக வெற்றி பெற்றதை அடுத்து அகிலேஷ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
 
உத்திரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதி எம்எல்ஏவாக அகிலேஷ் யாதவ் இருந்து வந்தார்.  திடீரென தன் முடிவை மாற்றிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டார். 
 
இந்த தேர்தலில்  சமாஜ்வாதி கட்சி 37 இடங்களைப் பெற்று  மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார்.

 
இந்நிலையில் தேசிய அரசியலில் தீவிரம் காட்ட அகிலேஷ் யாதவ்  திட்டமிட்டுள்ள நிலையில்,  அவர் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார்.