செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (17:55 IST)

சிவலிங்கம் கண் திறந்ததாகத் தகவல் ..குவிந்த பக்தர்கள்

சிவலிங்கம் கண் திறந்ததாகத் தகவல் வெளியானதால் பக்தர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இங்குப் எல்லா மதத்தினருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவரவர் விரும்பும் மதத்தைத் தொழுது கொள்ளலாம். மற்ற நாடுகளைவிடவும் இது இங்கு மத வழிபாடு அதிகம்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்திலுள்ள கோவிலில் சிவலிங்கம் கண்ணைத்திறந்ததாகத் தகவல் பரவியது.

இதைக்கேட்ட மக்கள் உடனே  கோயிலுக்குச் சென்று லிங்கத்தைப் பார்க்க ஆவலுடன் குவிந்தனர். இதனால் கூட்டம் கூடியதல் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.