புதன், 19 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (17:43 IST)

ஒட்டுமொத்த தியேட்டர் டிக்கெட்களையும் புக் செய்த....விஜய்யின் ரசிகை

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்  பார்ப்பதற்காக  மலேசியாவைச் சேர்ந்த  விஜய் ரசிகை ஆஷ்லினா என்பவர் தன் சொந்த ஊருக்கு வந்து ஒரு தியேட்டரில் அனைத்து டிக்கெட்களையும் புக் செய்து படம் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகியிருக்க வேண்டியது என்றாலும் கொரோனா தொற்று எனப்படுவதாலும், இன்னும் இதன் தீவிரத்தன்மை குறையவில்லை என்பதாலும் அரசு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அப்போது அனுமதி அளித்தது. ஆனாலும் படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது. உலகளவில் ரூ.200 கோடி வசூல் வாரிக்குவித்துள்ளது.

மாஸ் படங்களின் ஃபார்முலாவை மாற்றியுள்ளது நடிகர் விஜய்யின் மாஸ்டர் எனப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில்,  கிரிக்கெட் வீரர் ரஹானே, அஸ்வின் உள்ளிட்ட பலரும் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ளன்ர். விரையில் சூர்யாவின் சூரரைப் போற்றுப் படத்தின் ரிக்கார்டைஅமெசான் பிரைம் வீடியோவில் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடம் வெளியான 6 நாட்களில் சுமார் 2  கோடிப் பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்துள்ளது. இதை  விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த  விஜய் ரசிகை ஆஷ்லினா என்பவர் , மாஸ்டர் படம் பார்ப்பதற்கே சென்னை வந்து அண்ணா சாலையிலுள்ள்ள உள்ள தியேட்டரில் உள்ள மொத்த இருக்கைகளையும் புக் செய்து,தனது குடும்பத்தினருடன் அமர்ந்து விஜய்யின் மாஸ்டர்  படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.

இதுகுறித்து ஆஸ்லினாவை விஜய் ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

விஜய் ரசிகர்களுக்கு இணையாக ரசிகர்களுக்கு உலகமெங்கும் உள்ளனர் என்பதற்கு இதுதான் சாட்சி என டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.