திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (18:37 IST)

இந்தியாவில் ''டாப் பணக்கார பெண்கள்'' பட்டியலில் இவர்தான் தொடர்ந்து முதலிடம் !

roshini nadar
இந்தியாவில் பணக்கார பெண்கள் பட்டியலில் எச்.சி.எல்  நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டாப் பணக்கார பெண்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, கோட்டக் வங்கி மற்றும் ஹூருன் நிறுவனம் இணைந்து 2021 ஆம் ஆண்டின் இந்தியாவில் 100 பணக்கார பெண்களின் பட்டியலில் வெளியிட்டடுள்ளது.

அதில், ஹெச்.சி.எல். டெல்னாலஜிஸ் நிறுவன தலைவர் ரோஹினி நாடார் தொடந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார்.

கடந்த ஆண்டில், இவரது சொத்துகள் 54 % உயர்ந்து, 84 ஆயிரத்து 330 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில், இரண்டாவது இடத்தை நைக்கா அழகு சாதன் பொருட்கள்  நிறுவனத்தின் தலைவர் பல்குனி நாயன் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் 3 வது இடத்தை பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மசூம்தார் ஷா பெற்றுள்ளார்.