திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (14:25 IST)

மாணவனை வகுப்பறையில் மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை சஸ்பெண்ட்!

teacher massage
மாணவனை வகுப்பறையில் மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை சஸ்பெண்ட்!
மாணவனை வகுப்பறையில் மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள போகாரி என்ற பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிள சிங். இவர்  தனது வகுப்பில் படித்த மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விட கூறியுள்ளார் 
அந்த மாணவன் நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் வீடியோவை சக மாணவர்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.
 
இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து உத்தரப்பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் ஆசிரியை ஊர்மிளாவை சஸ்பெண்ட் செய்துள்ளது மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.