செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (17:00 IST)

பைக்கில் குறைவாக பெட்ரோல் வைத்தவருக்கு அபராதம்

bike
பைக் ஓட்டுபவர்களிடம் லைசென்ஸ் இல்லை மற்றும் ஹெல்மெட் போடவில்லை போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிப்பது இயல்பானதே. ஆனால் பைக்கில் சென்றபோது பைக்கில் பெட்ரோல் குறைவாக இருந்தது என்பதற்காக விதிக்கப்பட்டு உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
பைக்கில் பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டுனர் ஒருவருக்கு ரூபாய் 250 கேரள காவல்துறை அபராதம் விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றியவர் தனது யூடியூப் சேனலில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு உள்ளார் 
 
அதில் பைக்கில் குறைவான அளவில் பெட்ரோல் இருந்ததாக 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ரசீதையும் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து நெட்டிசன்கள் வித்தியாசமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இனிமேல் பைக் சக்கரத்தில் காற்று இல்லை என்றாலும் அபராதம் விதிப்பார்கள் என்றும் சாப்பிடாமல் வண்டி ஓட்டினால் கூட அபராதம் விதிப்பார்கள் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன