திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (14:33 IST)

அமைச்சருக்கு நெருக்கமான நடிகையின் வீட்டில் ரூ.29 கோடி பறிமுதல்!

actress ed
அமைச்சருக்கு நெருக்கமான நடிகையின் வீட்டில் ரூ.29 கோடி பறிமுதல்!
மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கோடி கோடியாக பணத்தை கைப்பற்றிய நிலையில் தற்போது அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி நெருக்கமான நடிகையின் வீட்டிலும் ரூபாய் 29 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் அமைச்சர் பார்த்தசாரதியின் வீட்டில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின
 
இந்தநிலையில் அமைச்சருக்கு நெருக்கமான நடிகை ஒருவரது வீட்டில் இருந்து 29 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதன் மதிப்பு 4 கோடி என்றும் கூறப்படுகிறது
 
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை 50 கோடி என்றும் இந்த பணம் முழுவதும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழல் இந்து கிடைத்த பணம் என்றும் அமலாக்கத்துறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்