அது நடந்தால்தான் குளிப்பேன்… 22 ஆண்டுகாலமாக சபதத்துக்காக குளிக்காமல் வாழும் மனிதர்!
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தரம்தேவ் என்ற நபர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் வாழ்ந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர்தான் தரம்தேவ் தனது இந்த செயலுக்காக இணையத்தில் வைரலானார். கடந்த 22 ஆண்டுகளாக அவர் குளித்ததே இல்லையாம். இடையில் சில முறை குளிப்பதற்கான சூழல் உருவான போதும், அவர் தன்னுடைய சபதத்துக்காக அதை மீறவில்லையாம். தன்னுடைய மனைவி மற்றும் மகன்கள் இறந்தபோது கூட இறுதி காரியங்களை செய்வதற்காக அவர் குளிக்கவில்லை.
அப்படி என்ன சபதத்தை அவர் மேற்கொண்டுள்ளார் தெரியுமா?. 22 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக உணர்ந்த அவர் 6 மாத காலம் ஒரு குருவிடம் சென்று தீட்சை பெற்றுள்ளார். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான இந்த குற்றம் குறையும் வரை குளிப்பதில்லை என்ற சபதத்தை எடுத்தாராம். தற்போது 62 வயதாகும் தரம்தேவ் இனிமேலும் அந்த சபதத்தை தொடரப்போவதாகக் கூறியுள்ளார்.