காங்கிரஸ் தான் இந்தியாவின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி.. ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா
காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என இன்று காட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது காங்கிரஸ் கட்சி தான் நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என்றும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலை நிறுத்தி நமது தேசத்தின் அடித்தளத்தை எழுப்புகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூர்னே கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஒ.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு பெரிய பதவி அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran