1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (20:35 IST)

பலாத்கார நாடகம் நடத்தி பணம் பறிக்க முயன்ற பெண் கைது!

ஹைதராபாத் நகரில் பாலியல் வன்கொடுமை செய்ய  முயன்றதாக புகார் அளிப்பேன் என்று ஓட்டுனரிடம் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர்  ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஹைதராபாத் நகரில் லிப்ட் கேட்டு காரில் ஏறிய பெண் தனது ஆடைகளை கிழித்துக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ய  முயன்றதாக புகார் அளிப்பேன் என்று ஓட்டுனரிடம் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதாராப் நகரில் ஒரு காரில் லிப்ட் கேட்டு ஏறிய பெண் தனது ஆடைகளை கிழித்துக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீஸில் புகார் அளித்தால் உனக்கு தண்டனனை கிடைக்கும் என  ஓட்டுனரிடம் கூறி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், பலாத்கார நாடகம் நடத்தி பலரை மிரட்டி பணம் பறித்துள்ளதாகவும், பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது