சென்செக்ஸ் மீண்டும் சரிவு: மாலையில் உயருமா?
நேற்று மும்பை பங்குச் சந்தை காலையில் சரிந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து மாலையில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. அதேபோல் இன்றும் பங்கு சந்தை சுமார் 200 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில் மாலையில் மீண்டும் உயருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 150 புள்ளிகள் குறைந்து 57 ஆயிரத்து 982 என தற்போது வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 64 புள்ளிகள் குறைந்து 17280 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
இருப்பினும் பங்குத்தந்தை வலுவாக இருப்பதாகவும் பங்கு சந்தையில் அதிக அளவில் சரிய வாய்ப்பு இல்லை என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
எனவே நீண்டகால முதலீட்டுக்கு பங்கு சந்தை சிறந்த முதலீடு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.