தொடர்புடைய செய்திகள்
- வாரத்தின் முதல் நாளே மீண்டும் சரிந்தது பங்குவர்த்தகம்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
- பட்ஜெட்டை தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை புள்ளிகள்! – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
- நாளை பட்ஜெட் தாக்கல்: இன்றே உயர்ந்த சென்செக்ஸ்!
- நீண்ட சரிவுக்கு பின் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!
- மீண்டும் 1000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: ரூ.20 லட்சம் கோடி நஷ்டம் என தகவல்!
இரண்டாவது நாளாகவும் சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கலக்கம்!
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதிக அளவில் சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
நேற்று சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் பங்குச்சந்தையில் முதலீடு செய்த கோடிக்கணக்கானோர் நஷ்டம் அடைந்தனர்
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது என்பதும் தற்போது சுமார் 20 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நிப்டி சற்றே உயர்ந்து காணப்படுகிறது என்பது ஆறுதல் கூறிய விஷயமாகும்.
அடுத்த கட்டுரையில்
