செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (10:44 IST)

மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மீண்டும் 500 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருக்கும் நிலையில் சற்றுமுன் 519 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 264 என உயர்ந்துள்ளது
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை 153 புள்ளிகள் உயர்ந்து 17,966 என்ற புள்ளிகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது