ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (10:32 IST)

வாரம் முதல் நாளே சறுக்கிய சென்செக்ஸ்!!

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய உடன் 1,011 புள்ளிகள் சரிந்தது. 

 
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி புள்ளிகள் குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆம், இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய உடன் 1,011 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 295 புள்ளிகள் குறைந்துள்ளது. சென்செக்ஸ் தற்போது 56,000 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல நிஃப்டி 16,690 புள்ளிகளில் வர்த்தமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.