1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sexual harassment on mentally challenged kid

தொடரும் அட்டூழியங்கள் - மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

டெல்லி
டெல்லியில் மனநலம் பாதித்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுமிகள் பெருமளவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கற்பழித்து கொலை, ஒடிசாவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை,   உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த பண்டி என்ற மனித மிருகம், அதே பகுதியில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்துள்ளான். கொடூரத்தின் உச்சமாய், தன் இச்சை செயலை வீடியோவாக எடுத்து, சிறுமியின் பெற்றோருக்கு அனுப்பியுள்ளான். இதனால் அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் அந்த அயோக்கியனை கைது செய்த போலீஸார் அவனிடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமாதிரியான மிருகங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
நிர்மலா தேவி கூறிய விவிஐபிகளின் பெயர்கள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்