1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (15:38 IST)

சென்னையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞர் கைது

சென்னையில் 4 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சிறுமிகள் பெருமளவில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை, ஒடிசாவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை,   உத்தரபிரதேசத்தில் இளம் பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை ஆதம்பாக்கம் மேட்டுக்கழனி பகுதியைச் சேர்ந்தவர். இவரது 4 வயது மகள் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தார். அதே பகுதியில் ஜாகிர் முண்டல் என்ற வட மாநில இளைஞர், கட்டட வேலை செய்து வந்தார். சிறுமி விளையாடுவதை நோட்டமிட்ட அவர், சிற்மிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் சிறுமி கத்தியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்
 
இதனையடுத்து போலீஸார், ஜாகீர் முண்டலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.