1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (13:28 IST)

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி இதுகுறித்து கூறியபோது, ‘இந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாப்பட உள்ளது. இதையொட்டி டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்படும்
 
சொர்க்கவாசல் தரிசனத்திற்காக  ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சம், சர்வ தரிசன டோக்கன்கள் 5 லட்சம் ஆன்லைனில் வழங்கப்படும். மேலும் பக்தர்களின் வேண்டுகோளின்படி திருமலையில் இலவச பேருந்துகளில் பயணிகள் இறங்க வேண்டிய இடம் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்படும்.
 
திருமலையில் உள்ள ஓட்டல்களில் தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பக்தர்களிடம் டாக்ஸி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.
 
 
Edited by Mahendran