வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (09:44 IST)

புரட்டாசி விரதத்தால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்! – கிலோமீட்டர் கணக்கில் க்யூ!

Tirupathi
புரட்டாசி மாதம் நடந்து வரும் நிலையில் மக்கள் பலரும் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டுள்ளதால் திருப்பதியில் கூட்டம் நிரம்பி வழிகிறது.



புரட்டாசி மாதத்தில் பலரும் அசைவம் தவிர்த்து விரதம் இருந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் நடந்து வரும் நிலையில் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த வாரம் தொடர்ந்து விடுமுறை இருப்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பக்தர்கள் பலரும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு க்யூவில் காத்திருக்க வேண்டியுள்ளது. சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K