ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (17:41 IST)

பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி கோவில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சமீபத்தில் பிரமோற்சவம் நிகழ்ச்சி நடந்த நிலையில் பிரம்மோற்சவ நாட்களில் மட்டும் ஏழுமலையானுக்கு உண்டியலில் ரூ.25.22 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் நிகழ்வின்போது உண்டியல் காணிக்கை தொகை அதிகரித்து வருகிறது. கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 23 தேதி ஒரே நாளில் ரூ.3.6 கோடியாகவும், 2011 ஆண்டு நவம்பர் 1 தேதி ரூ.3.8 கோடியாகவும், 2012 ஜனவரி 1ஆம் தேதி ரூ.4.23 கோடியாகவும் உண்டியல் காணிக்கை இருந்தது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பிரமோற்சவ நிகழ்வின்போது ரூ.25.22 கோடியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva