செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (06:57 IST)

ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி ஜனாதிபதி: உமர் அப்துல்லா பேச்சால் பரபரப்பு

தேர்தல் நேரத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து அரசியல்வாதிகள் சூடான விவாதம் எழுப்புவதும், தேர்தலுக்கு பின் இந்த விவகாரம் அடங்கி போவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறிய ஒரு கருத்துக்கு ஆவேசமாக சமீபத்தில் பதிலளித்த முப்தி, அருண்ஜெட்லி கூறியது போல் நடந்தால் ஜம்மு காஷ்மீர், இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய நிலை வரும் என்றார்.
 
இந்த நிலையில் நேற்று காஷ்மீரில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, 'அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 35ஏ பிரிவை அழிக்க நினைத்தால் ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி ஜனாதிபதி என்ற முறைக்கு திரும்ப நேரிடும் என எச்சரித்தார்.
 
மேலும் தங்கள் கட்சி எப்போதுமே மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை நடைமுறை படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், எனக்கு பதிலளிப்பதாக நினைத்து கொண்டு பிரதமர் மோடியும் பாஜகவினர்களும் என்னை பிரபலப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேருவின் காஷ்மீர் கொள்கை தவறு என்றும் என்றும் உமர் அப்துல்லா தெரிவித்தார்.