வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (09:16 IST)

தொடர் தோல்வி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்ய பிரதமர் முடிவா?

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் திட்டமான பிரெக்சிட் என்றழைக்கப்படும் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் தொடர் தோல்வி ஏற்பட்டு வருவதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இங்கிலாந்து பிரதமர் தெரசா மே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது,.
 
பிரெக்சிட் என்றழைக்கப்படும் திட்டத்திற்கான வாக்கெடுப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நடைபெற்று ஏற்கனவே தோல்வி அடைந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் நடந்த வாக்கெடுப்பிலும் தோல்வி அடைந்தது. 
 
இந்த நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் தீர்மானம் தொடர் தோல்வியை அடைந்து வருவதால் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு மார்ச் 29-ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குமுன் பிரதமர் தெரசா மே பதவி விலகுவார் என்றும், அதன்பின்னர் தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது