திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (16:26 IST)

10 செக்கெண்ட்டில் பாகிஸ்தான் காலி: மோடியிடம் உள்ள ரகசிய சுவிட்ச்?

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத்தில் நேற்று மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 182 மீட்டர் உயரம் உள்ள இந்த சிலை உலகின் உயரமான சிலையாக உள்ளது. 
 
இந்த சிலைக்கு 'ஒற்றுமைக்கான சிலை' என பெயர் சூட்டப்பட்டு, ரூ.2,989 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த சிலை குறித்த தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
 
அதாவது, இந்த சிலை வெறும் கல்லால் ஆன சிலை இல்லை என்றும். மோடியின் நேரடி கண்காணிப்பில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ராக்கெ கிரேட் டைட்டானியம் மூலம் செய்யப்பட்டுள்ளதாம். 
 
மேலும், இந்த சிலையால் நமது நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாம். பிற நாடுகளின் தாக்குதல்களை இந்த சிலை கண்டுபிடித்து முன்னரே தெரிவிக்குமாம். அதோடு, பாகிஸ்தான் நாட்டை 10 வினாடிகளில் தாக்கு அழிக்கும் அல்ட்ராஜியோ ரக்கெட் உள்ளதாம்.
 
இந்த ராக்கெட்டின் சுவிட்ச் மோடியிடம் எப்போதும் ஆயத்தமாக உள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ரூ.2000 நோட்டுகள் வெளியன போது அதில் சிப் இருக்கு என கூறி பொய்யான கேலி தகவல்கள் வெளியானது போல இந்த சிலையை வைத்தும் பொய்யான கேலி செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது.