செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (10:11 IST)

சர்தார் பட்டேல் சிலையின் ரெக்கார்டை முந்தபோகும் மற்றொரு சிலை. யாருக்கு? எங்கே தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையின் ரெக்கார்டை மற்றொரு சிலை முந்தி செல்ல இருக்கிறது.
 
சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் 182 மீட்டர் உயரத்தில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக உலகின் மிகப்பெரிய சிலை(153 மீட்டர்) என கூறப்பட்டு வந்த சீனாவில் இருக்கும் புத்த சிலையின் ரெக்கார்டை இந்த சிலை முந்தியுள்ளது.
 
அடுத்ததாக சர்தார் பட்டேலின் சாதனையை முறியடிக்க மற்றொரு சிலை நிறுவப்பட உள்ளது. அது எங்கே என்று கேட்கிறீர்களா? அதுவும் இந்தியாவில் தான். மும்பை கடற்கரையில் அமைக்கப்பட உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை 210 மீட்டர் உயரத்தில் கட்டப்பட இருக்கிறது. சர்தார் பட்டேலின் சிலையை விட உயரமாக கட்ட வேண்டும் என்ற போட்டியில் இந்த சிலை கட்டப்பட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 4000 கோடி ரூபாய் இதற்காக செலவிடப்படுகிறது.
நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல இப்படி போட்டி போட்டால் பரவாயில்லை. இப்படி தேவையில்லத விஷயத்திற்கு போட்டி போடுபவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.