திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (10:45 IST)

சர்தார் படலே விரும்ப மாட்டார்! மோடி அரசை சாடிய சித்தார்த்

குஜராத் மாநிலம் கேவாடியாவில் நர்மதா அணைக்கு அருகில் 597 அடி உயரம் கொண்ட உலகிலேயே மிக உயரமான சிலையாக உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்நிலையில் நடிகர் சித்தார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில், தேவையில்லாத, மரியாதை இல்லாத வழியில் நாட்டின் சிறந்த தலைவர் இன்று குஜராத்தில் கொண்டாடப்பட்டுள்ளார். சர்தார் பட்டேலை தேர்தலுக்காக பாஜகவினர் பயன்படுத்தி விட்டனர்.
 
சர்தார் படேல் உயிரோடு இருந்திருந்தால் இவ்வளவு பெரிய தொகையில் சிலை வைக்க அனுமதித்திருக்க மாட்டார்.அவரைப் பற்றி இவர்களுக்கு போதுமான அளவு தெரியவில்லை. கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள். நாம் வரி செலுத்துகிறோம். இது நமது உரிமை என்று  தெரிவித்துள்ளார்.