1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (16:40 IST)

காதலர் தினத்தில் மாணவர்கள் எடுத்த உறுதிமொழி – உஷாரானப் பள்ளிகள்

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் குஜராத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இந்தியாவின் சிலப் பகுதிகளில் இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் காதலுக்கும் காதலர்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும்  பொது இடங்களில் கூடும் காதலர்களிடமும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் வட இந்தியாவில் இந்த மாதிரியான தனிநபர் உரிமை மீறல் அதிகமாகியுள்ளது.

ஆனால் அதற்கு எதிர்த்திசையில் காதல் என்றால் என்னவென்றேப் புரியாத வயதில் உள்ள பதின் பருவ மாணவர்களும் காதலர் தினங்களைக் கொண்டாடி வரும் தர்மசங்கட சூழ்நிலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மாணவர்களிடையேக் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குஜராத்தின் சூரத் நகரில் உள்ள பள்ளிகள் இணைந்து மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்துள்ளனர்.

அந்த உறுதிமொழியின் ஆங்கில வடிவம்

We will love this gift of life given by God, 
not just our lover, 
we shall love the whole family. 
We shall love Mondays to Fridays just 
as we do Saturdays and Sundays, 
We shall love education which is true essence of life, 
Why only one, we shall love a thousand, 
we shall love our school, 
college, 
teachers, 
guardian and 
counsellor, 
We shall love the festivals of Valentine’s (Day) 
and Vasant panchmi, 
but first we shall love the virtues 
instilled by our parents


தமிழ் வடிவம்

நாங்கள் கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை காதலிப்போம்
காதலரை மட்டும் அல்ல
நாங்கள் எங்கள் குடும்பத்தைக் காதலிப்போம்
நாங்கள் திங்கள் முதல் வெள்ளி வரையுள்ள கிழமைகளைக் காதலிப்போம்
சனி ஞாயிறைப்போல
ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும், ஆயிரம் பேரைக் காதலிப்போம்
நாங்கள் எங்கள் வாழ்க்கையின் முக்கியக் கருப்பொருளான கல்வியை,
பள்ளியை,
கல்லூரியை,
ஆசிரியர்களை,
பாதுகாவலர்களை,
ஆலோசகர்களைக் காதலிப்போம்
நாங்கள் காதலர் தினத்தைக் காதலிப்போம்
வசந்த பஞ்சமியையும்
ஆனால் முதலில் எங்கள் பெற்றோர் எங்களுக்குக் கற்றுத்தந்த
நல்லொழுக்கங்களைக் காதலிப்போம்.