காதலர் தினம்: சிங்கிள்ஸுகளுக்கு ஆதரவாக களமிறங்கிய எம்.பி.ஏ பட்டதாரி

MBA
Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (09:27 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் சிங்கிள்ஸுகளுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் ஊரெங்கிலும் உள்ள ரெஸ்டாரெண்டுகள், காஃபி ஷாப்களில் காதல் ஜோடிகளை கவர புதுப்புதுசான சலுகைகளையும், ஐடியாக்களையும் கொடுத்து வருகின்றனர்.
 
இதற்கிடையே அகமதாபாத்தில் சிங்கிள்ஸுகளை கவர ஒரு புது கடை திறக்கப்பட்டுள்ளது. ’எம்.பி.ஏ ச்சாய் வாலா’ என்ற பெயரில் பேஸ்புக்கில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
wala
 
அது என்னவென்றால், காதலர் தினத்தன்று காதலர்கள் மட்டுமே சந்தோஷமாக இருக்க வேண்டுமா என்ன? அவர்களுக்கு மட்டுமே சலுகைகள் வேண்டுமா என்ன? போதாது சிங்கிள்ஸுகளுக்கும் சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும். ஆகவே ’எம்.பி.ஏ ச்சாய் வாலா’ காதலர் தினத்தன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை சிங்கிள்ஸுகளுக்கு இலவச டீ வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ராபூரில் ’எம்.பி.ஏ ச்சாய் வாலா’ இயங்கி வருகிறது. இதனை பிரபுல் பில்லோர் என்ற எம்.பி.ஏ டிராப் அவுட் பட்டதாரி  நடத்தி வருகிறார். இவரது கடையில் 35 வகையான டீ மற்றும் ஸ்நாக்ஸுகள் கிடைக்கிறது.
chai
இதுபற்றி பிரபுல் பில்லோர் கூறுகையில், காதலை பிடிக்காமலும், அதிலுருந்து ஒதுங்கி இருக்க நினைப்பவர்களும், சிங்கிளாகவே இருக்கலாம் என நினைப்போரும் பலர் இருக்கிறார்கள் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களும் இந்த நாளை கொண்டாட வேண்டும். ஆகவே தான் சிங்கிள்ஸ்சாக இருக்கும் ஆண், பெண்களுக்கு இலவச டீ கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.
 
எனது கடைக்கு காதலர்கள் அல்லாது சிங்கிள்ஸுகள் மட்டுமே வருவார்கள் என நம்புகிறோம். கடைக்கு வருபவர்கள் காதலர்களா அல்லது சிங்கிள்ஸுகளா என்பதை தீர்மானிக்க இயலாது. ஆகவே என் கடைக்கு உண்மையான சிங்கிஸுகள் வந்து எங்களின் சுவையான டீயை ருசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
tea
 
நீங்கள் ஒரு வேளை சிங்கிளாக இருந்தால், அதுவும் அகமதாபாத்தில் இருந்தால், ’எம்.பி.ஏ ச்சாய் வாலா’ கடைக்கு சென்று இலவச டீயை ருசித்து வாருங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :