என்னாது... தாஜ்மஹால்ல கட்டினது ஷாஜகான் இல்லையா...?

Last Updated: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (18:13 IST)
பிப்ரவரி மாதம் என்றாலே பலருக்கு காதலர் தினம்தான் நினைவுக்கு வரும். காதல் என்றால் நிச்சயமாக தாஜ்மஹாலும் நினைவிற்கு வரும். இப்போது தாஜ்மஹால் பற்றிய புதிய தகவலை தெரிந்துக்கொள்ளங்கள்...
 
தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான் என அனைருக்கும் தெரியும். அதுவும் இதனை தனது மனவி மும்தாஜ்ஜின் நினைவாக க்ட்டினார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இங்குதான் உள்ளது ட்விஸ்ட். 
 
ஆம், வரலாற்றை பின்னோக்கி சென்று பார்த்தால், தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டியதற்கான ஆதாரம் எதுவுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லையாம். இதோடு அதிர்ச்சி அளிக்கும் இன்னொரு செய்தியும் உள்ளது. 
 
ஷாஜகான், ஹிந்து மன்னர் ஒருவரிடமிருந்து தாஜ்மஹாலை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தாஜ்மஹாலை கைபற்றிய பிறகுதான் மும்தாஜிற்காக சமாதியாக்கும் பணியை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் என்றும் அதற்கான அடையாளங்கள் பலவும் இன்னும் தாஜ்மஹாலில் காணப்படுகிறது என்பதும் மற்றுமொரு அதிர்ச்சி. 
 
ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு கைவிடப்பட்டாலும் இந்த செய்தி இன்னும் புழக்கத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :