வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜூலை 2022 (12:14 IST)

யூடியூப் பார்த்து பள்ளிச்சிறுவன் தயாரித்த மதுவை குடித்த நண்பனுக்கு நேர்த அதிர்ச்சி சம்பவம்

alcohol
யூடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளிச் சிறுவனின் மதுவை குடித்த அவரது நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் திராட்சை பழத்தை வாங்கி யூடியூபில் பார்த்து மது தயாரிக்க முயற்சித்துள்ளார்.  அவ்வாறு தயாரித்த மதுவை சில நாட்கள் பூமிக்குள் புதைத்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
 
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து மண்ணில் புதைத்து வைத்த பாட்டிலை எடுத்து பள்ளிக்கு சென்று தனது நண்பனுக்கு குடிக்க கொடுத்துள்ளார். அதை குடித்த அவரது நண்பன் சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழ உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இதுகுறித்து பள்ளி சிறுவனிடம் போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் விசாரித்தபோதுதான் யூடியூப் பார்த்து மது தயாரித்ததாகவும் அந்த மதுவை நண்பனுக்கு குடிக்க கொடுக்க கொடுத்ததாகவும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.