வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (21:13 IST)

ஜனநாயகத்தின் காவலர் அண்ணாமலை: மதுரை ஐகோர்ட் கிளை பாராட்டு

Annamalai
ஜனநாயகத்தின் பாதுகாவலர் அண்ணாமலை என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
 
பாஸ்போர்ட் வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு குறித்து மதுரை ஐகோர்ட்டு கூறியபோது, ‘ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது என்றும் அவர் இல்லை எனில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் பாஸ்போர்ட் விவகாரத்தில் நோடல் அலுவலர் உள்ளவரை அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பிருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
டேவிட்சன் தேவாசிர்வாதம் குற்றமற்றவர் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்
 
ஜனநாயகம் பாதுகாவலராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளார் என ஐகோர்ட் நீதிபதி அவருக்கு பாராட்டு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது