1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. sathvi pragya controversy speech

உங்கள் வீட்டில் கூர்மையான ஆயுதம் வைத்துக் கொள்ளுங்கள்: சாத்வி பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

sathvi
உங்கள் வீட்டில் கூர்மையான ஆயுதத்தை வைத்து கொள்ளுங்கள் என பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சாத்வி பிரக்யா தாக்கூர், ‘இந்த உலகில் லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களை பாவிகள் போல் நடத்த வேண்டும் என்றும் உங்கள் மகள்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் ஏதோ ஒரு விதத்தில் ஜிகாத் செய்கிறார்கள் என்றால் உங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்து இருங்கள் என்றும் ஆயுதங்கள் இல்லாவிட்டால் காய்கறி வெட்டும் கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்பதால் எல்லாருக்கும் தற்காப்புக்கான உரிமை இருக்கிறது என்றும் யாராவது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாக்கினால் அவர்களுக்கு நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம், புத்தாண்டுக்கு கட்டுப்பாடு!