1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (21:13 IST)

டெல்லி: மத்திய பாஜக அரசை கடுமையான விமர்சித்த ராகுல்காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி  தன் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டி, இந்தியா முழுவதும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை நடத்தி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தனது யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் என பல மாநிலங்களை தாண்டி  100 வது நாளான இன்று இந்த யாத்திரை டெல்லியில் நடந்து வருகிறது.

இந்த யாத்திரையில் நடிகரும் ம. நீ, மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் தலை நகர் டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பேசியதாவது: நாட்டின் அனைத்து இடங்களிலும் மதவெறுப்புணர்ச்சி  உள்ளது. இந்த யாத்திரையை நாங்கள் தொடங்கியபோது, அந்த வெறுப்புணர்ச்சியை போக்க நினைத்தேன். அவர்கள் வெறுப்பை பரப்புகையில் நாங்கள் அன்பை விதைத்து வருகிறோம். அவர்கள் வன்முறையை பரப்புகையில் நாங்கள் அஹிம்சையை பரப்புகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், இது பிரதமர் மோடியின் அரசாங்கம் அல்ல, தொழிலதிபர்களான அதானி மற்றும் அம்பானியின் அரசாங்கம் ; நாட்டில் படித்துள்ள இளைஞருக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.